கிராம சபை கூட்டம், இந்தியக் குடியரசு நாள் (26, சனவரி), தொழிலாளர் நாள் (1, மே), இந்திய விடுதலை நாள், (15, ஆகஸ்டு) காந்தி ஜெயந்தி (2, அக்டோபர்), உலக நீர் நாள் (மார்ச் 22) மற்றும் உள்ளாட்சி நாள் (நவம்பர் 1) ஆகிய ஆறு சிறப்பு நாட்களின் போது, தமிழ்நாட்டின் அனைத்து கிராம ஊராட்சி மன்றத் தலைவர்களால் கூட்டப்படுகிறது.
இந்தக் கிராம சபைக் கூட்டத்தில், ஊராட்சி மன்ற நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையையும், பொறுப்புணர்வை ஊக்குவித்தல், வளர்ச்சித் திட்டங்களை திட்டமிடுதல் மற்றும் செயல்படுத்தப்படுதல் மற்றும் பயனாளிகளின் விருப்பத்தின்படி பொதுமக்களின் பங்களிப்பை மேம்படுத்துதல் மற்றும் சமூக தணிக்கைக்கு வழி வகுத்தலே கிராம சபைக் கூட்டதின் நோக்கமாகும். கிராம மக்களின் கையிலிருக்கும் அதிகாரம், கிராம சபைக் கூட்ட நடவடிக்கைகள் ஆகும்.
கிராம சபைக் கூட்டத்தில், தங்கள் கிராமங்களில் அரசு மதுக்கடைகள் நடத்துவதை தடை செய்து தீர்மானம் இயற்றினால், அக்கிராமங்களில் அரசு மதுக்கடைக்களை திறக்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிராமச் சபைக் கூட்டத்தின் கோரம் (கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டிய குறைந்த பட்ச வாக்காளர்கள்), ஊராட்சி மன்றத்தின் மொத்த வாக்காளர்களில் 10% வாக்காளர்களாக இருக்க வேண்டும். அல்லது ஊராட்சி மன்றத்தின் மக்கள் தொகை ஏற்றவாறு கோரம் இருந்தால் கிராம சபைக் கூட்டம் நடத்தலாம்.
· மக்கள் தொகை 500 வரை கொண்ட ஊராட்சியின் கிராமச் சபை கூட்டத்தின் கோரம் 50 ஆகும்.
· மக்கள் தொகை 501 – 3,001 வரை கொண்ட ஊராட்சியின் கிராமச் சபை கூட்டத்தின் கோரம் 100 ஆகும்.
· மக்கள் தொகை 3001 – 10,000 வரை கொண்ட ஊராட்சியின் கிராமச் சபை கூட்டத்தின் கோரம் 200 ஆகும்.
· மக்கள் தொகை 10,000க்கு மேல் கொண்ட ஊராட்சியின் கிராமச் சபை கூட்டத்தின் கோரம் 300 ஆகும்.
கிராம சபைக் கூட்டத்தில் குறைந்த பட்ச உறுப்பினர்கள் கலந்து கொள்ளாத போது, நடத்தப்படும் கிராம சபைக் கூட்டத்தின் தீர்மானங்கள் சட்டப்படி செல்லுபடியாகாது.
*கிராமசபையைசரியாகநடத்தவைக்கஎளியவழிகள் (கிராமசபை - ஓராண்டுதிட்டம்)* கிராமசபைஎன்றஉன்னதஜனநாயககோட்பாட்டினை உலகிற்கு வழங்கிய தமிழ்நாட்டில் வலிமையான கிராம சபையைஒருசடங்காக, சாதாரநிகழ்வாகமாறமேலேயுள்ளஅனைவரும்ஒவ்வொருவகையில்காரணமாகஉள்ளார்கள். உங்கள்ஊரில்கிராமசபைகூட்டம்சரியாகநடக்காமல்இருக்ககாரணமானவர்கள்.
1. மாவட்ட ஆட்சியர்,
2. தமிழக அரசு,
3. ஊரகவளர்ச்சிதுறை,
4. மாவட்டஅளவிலானஊரகவளர்ச்சிதுறைஅலுவலர்கள்,
5. காவல் துறை,
6. வருவாய்துறை,
7. மற்றஅரசுதுறைகள்,
8. அரசியல்கட்சிகள்,
9. ஊராட்சிமன்றதலைவர்,
10. ஊராட்சிசெயலாளர்,
11. ஊராட்சிமன்றஉறுப்பினர்கள்,
12. பற்றாளர்
13. கிராமசபைஉறுப்பினர்களான பொது மக்கள்,
14. சமூக ஆர்வலர்கள்.
15. நூறுநாள்திட்டபயணாளிகள்.
ஆட்சியாளர்கள் முதல் குடிமக்கள்வரைகிராமசபைதொடர்பானதவறுகளைகுறைகளைஉடனடியாகயாராலும்திருத்தமுடியாதநிலையில்நிச்சயமாகநிதானமும்அறிவார்ந்தபோராட்டகுனமும்கொண்டசமூகஅக்கறையும்உள்ளவர்கள்தொடர்ந்துசோர்ந்துவிடாமல்முயற்சிசெய்தால்அவர்களின்கிராமத்தில் நிச்சயமாக உண்மையில் மிகப்பெரியமாற்றத்தைஉண்டாக்கமுடியும். கிராமசபைதொடர்பானதொடர்பிரச்சாரம், மக்களைதிரட்டுதல், சட்டபோராட்டங்கள், களப் போராட்டங்கள், பொதுநலவழக்கிடுதல் போன்ற முறைகளில் கிராமசபையைவலிமையாக்கமுடியும். ஆனால்இவற்றைதனிமனிதனாகவோஒருசிலராகஉள்ளவர்களால் மட்டுமே செய்ய முடியாது.
அமைப்புரீதியாகவலிமையானபலமும்பணபலமும்உள்ளவர்களால் மட்டுமே முடியும். கிராமசபைமீதுஅக்கரையுள்ள கிராம வளர்ச்சி மீதுகாதல்கொன்டஎளியசாமானியதனிமனிதனால்கிராமசபையைவலிமையாக்கமுடியுமா ? வெற்றிபெறமுடியுமா ?? முடியும்நிச்சயமாகமுடியும். ஒரேஒருதனிநபரால்ஒராண்டுக்காலம்தொடர்ந்துவிடாமல்முயற்சிசெய்தால் 50% நிச்சயமாகசரியானகிராமசபையைகூட்டநடத்தவைக்கமுடியும். வழிமுறைகள்
1. முதலில் ஒருசரியானகிராமசபைகூட்டம்எப்படிசட்டபடிநடக்கவேண்டும்என்றவிபரங்களைநீங்கள்நன்குதெரிந்துக்கொள்ளவேண்டும்.
2.உங்கள்ஊர்கிராமசபையில்நடக்கும்சட்டமீறல்களைதெரிந்துக்கொள்ளவேண்டும்.
3.முதன்முதலாகநீங்கள்கலந்துக்கொள்ளும்கிராமசபையில்கேள்விக்கேட்கவேகூடாதுகிராமசபைக்கூட்டங்களில் கலந்துக் கொண்டு அமைதியாகபார்வையாளராக வேடிக்கை பார்க்க வேண்டும். காவல்நாயாககுலைத்துகல்லடிவாங்காமல்கண்காணிப்பு நாயாக (watch dog) அமைதியாக உற்றுகவனிக்கவேண்டும். (புலிபதுங்குவதுபாய்வதற்காக)
4. யூடியூப் மற்றும்முகநூலில்நேரலை, செல்போனில்வீடியோபதிவுசெய்தல்போன்றவகைகளில்கிராமசபையைஆவணப்படுத்த வேண்டும். (உள்ளாட்சி தலைவர்களைகொஞ்சம்புகழ்ந்துபாருங்கள்இதையெல்லாம்அனுமதிப்பார்கள்).
5. இவற்றில் நீங்கள்நன்குபயிற்சிஎடுத்துக்கொன்டபிறகுஉங்கள்திறமையைவித்தையைகாட்டஆரம்பிக்கவேண்டும்.
6. கிராம சபைகூட்டத்தில் பங்கேற்கும் முன்பு காவல்துறைபாதுகாப்புகேட்டுகாவல்துறைக்குமனுக்களைதபால்மூலம்அனுப்பிவையுங்கள். 7. கிராமசபைக்கூட்டம்அறிவிப்பினை
7 நாட்களுக்கு முன்புவெளியிடஊராட்சிதலைவருக்குஅறிவுறைசொல்லகோரிக்கைவைத்துமனுக்களைஅனுப்பவேண்டும்.
8. கிராமசபைக்கூட்டம்அறிவிப்பினை 7 நாட்களுக்கு முன்பு வெளியிடதவறியஊராட்சிதலைவர்மீதுநடவடிக்கைஎடுக்ககோரிக்கைவைத்துமனுக்களைஅனுப்பவேண்டும்.
9. பற்றாளரை உள்ளாட்சிசட்டப்படிகிராமசபைகூட்டத்திற்கு முன்னதாக நியமனம் செய்யகோரிமாவட்டஆட்சியருக்கு கோரிக்கை வைக்க வேண்டும்.
10.கிராமசபைகூட்டம்முடிந்தபின்னர்பற்றாளர்செய்துள்ளதவறுகளைசுட்டிக்காட்டி அவர் மீது ஒழுங்குநடவடிக்கைஎடுக்கபுகார்மனுக்களைஅனுப்பவேண்டும்.
11. கிராமசபைகூட்டத்தற்கு முன்பாக பல்வேறு அரசுதுறைஅலுவலர்களைகிராமசபைக்கூட்டத்திற்கு அனுப்பி வைக்க கோரிமனுக்களைஅனுப்பவேண்டும்.
12.கிராமசபைகூட்டம்முடிந்தபின்னர்பல்வேறுஅரசுதுறைஅலுவலர்களைகிராமசபைக்கூட்டத்தில் கலந்துக் கொள்ள தவறியதற்குஒழுங்குநடவடிக்கைஎடுக்ககோரிதனிதனியாகஅந்தந்ததுறைகளுக்கு மனுக்களை அனுப்ப வேண்டும். கலந்துக்கொன்டஅலுவலர்களுக்கு பாராட்டு கடிதம் அனுப்பிவைக்கவேண்டும்.
13. கிராமத்தில் உள்ள பொது மக்களைகிராமசபைக்கூட்டத்தில் கலந்துக் கொள்ள பேஸ்புக்வாட்ஸ்அப்உள்ளிட்டசமூகஊடகங்கள்மூலமகவும்துண்டுபிரசுரங்கள் மூலமாகவும் செலவு குறைவாகஎப்படிஎல்லாம்முடியுமோஅப்படியெல்லாம் அழைப்பு விடுக்க வேண்டும். கிராமசபையைபொதுமக்கள்முன்புவிளம்பரப்படுத்த வேண்டும்.
14. உள்ளூர்அமைச்சர், நாடாளுமன்றஉறுப்பினர்சட்டமன்றஉறுப்பினர்மாவட்டகவுன்சிலர்ஒன்றியகவுன்சிலர்காவல்ஆய்வாளர், காவல்துணைக்கண்காணிப்பாளர் வட்டாட்சியர் மாவட்ட ஆட்சியர்போன்றமுக்கியபிரமுகர்களை உங்கள் ஊர் கிராமசபைகூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக கலந்துக்கொள்ளதனித்தனியாக அழைப்பு அனுப்ப வேண்டும்.
15. கிராம சபைகூட்டத்தில் நடைபெற்ற சட்ட முறைக்கேடுகளை ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக புகார்மனுக்களைபிடிஓமுதல்கவர்னர்வரைமனுக்களைஅனுப்பிவைக்கவேண்டும்.
16. கோரம் இல்லாதகிராமசபைகூட்டம்தொடர்பானநிகழ்வுகளில் கோரம் இல்லாமல் நடத்தப்பட்ட கிராம சபை கூட்டத்தைஇரத்துசெய்துவிட்டுபுதியதாககிராமசபைகூட்டத்தைநடத்தகோரிக்கைமனுக்களைஅனுப்பவேண்டும்அந்தபுதியகிராமசபைக்கூட்டத்ததில் மாவட்ட ஆட்சியரை கிறப்புஅழைப்பாளராக கலந்துக் கொள்ள அழைக்கவேண்டும்.
17.கிராமசபைக்கூட்டம்சட்டபடிசரியாகநடந்ததுபோன்றஆவணங்களைஅலுவலர்கள்நிச்சயமாகஉண்டாக்குவார்கள். அதனை உடைக்ககிராமசபைதொடர்பானதவறானஆவணங்களை, பதிவுகளை, புகைப்படங்களை, அறிக்கைகளை, கடிதங்களை அனுப்பியஅலுவலர்கள்மீதுஒழுங்குநடவடிக்கைஎடுக்ககோரி, குற்றவியல்வழக்குநடவடிக்கைஎடுக்ககோரிதொடர்ந்துமனுக்களைஅனுப்பவேண்டும்.
18. அனுப்பிய மனுக்கள்தொடர்பாகநடவடிக்கைஎடுக்கப்பட்ட விபரங்களை தகவல் உரிமைசட்டமனுக்கள்மூலம்கேட்கவேண்டும்.
19.கிராமசபைதொடர்பானவிசயங்களைசென்னைஉயர்நீதிமன்றமதுரைஅமர்வுவழக்குடபிள்யூ.பிஎண் 23504/2018 -ல் இரண்டு நீதிபதிகள்வழங்கியதீர்ப்புபடிஆய்வுசெய்யும்படிவட்டாட்சியருக்கு கோரிக்கை வைக்கவேண்டும்.
20. உள்ளுர்நீதிமன்றத்தில் உள்ள இலவச சட்டஉதவிமையத்தில்கிராமசபைதொடர்பாகபுகார்கள்செய்யவேண்டும்
21. உங்கள் ஊர்கிராமசபைகூட்டத்திற்கு இலவச சட்ட உதவிமையதலைவரானநீதிபதியைகலந்துக்கொள்ள சொல்லி அழைக்க வேண்டும். குறைந்தபட்சம்இலவசசட்டஉதவிமையம்சார்பில்ஒருஅலுவலரைஅல்லதுஇலவசசட்டஉதவிமையவழக்கறிரையாவது அனுப்பி வைக்க கோரிக்கையைவைக்கவேண்டும். மாவட்டநீதிமன்றஉயர்நீதிமன்றஇலவசசட்டஉதவிமையநீதிபதிகளையும் இதே வகையில் அழைக்கலாம்.
22. உங்கள்ஊர்கிராமசபைகூட்டத்திற்கு கலந்துக் கொள்ள சொல்லிஉள்ளூர்காவல்ஆய்வாளர்அவர்களைஅழைக்கவேண்டும். குறைந்தபட்சம்காவல்துறைசார்பில்ஒருகாவலரையாவது சிறப்பு அழைப்பாளராக அனுப்பிவைக்ககோரிக்கையைவைக்கவேண்டும். காவல்மாவட்டகாவல்கண்காணிபாளர், துணைக் காவல் கண்காணிப்பாளர் அவர்களையிம் இதே வகையில்அழைக்கலாம்.
தகவல்அறியும்உரிமைசட்டத்தில்பெறவேண்டியவிபரங்கள்கிராமசபைகூட்டஅறிவிப்புபற்றியவிபரங்கள். கிராமசபைகூட்டம்செலவிணங்கள் பற்றிய விபரங்கள், கிராமசபைகோரம்பற்றியவிபரங்கள். கிராமசபைகூட்டதீர்மானங்கள் நகல்கள்.
கிராம சபைகூட்டம்பற்றியகிராமஊராட்சிமன்றதலைவர்அறிக்கை. கிராமசபைகூட்டம்பற்றியவட்டாரவளர்ச்சிஅலுவலர்அறிக்கை. கிராமசபைகூட்டம்பற்றியபற்றாளர்அறிக்கை. கிராமசபைகூட்டம்பற்றியமாவட்டாட்சியர் அறிக்கை.
கிராம சபையில்ஊராட்சிநிர்வாகம்எடுத்துள்ளபுகைப்படங்கள் ஊராட்சி நிர்வாகம் இணையத்தில்பதிவேற்றம்செய்தவிபரங்கள். முந்தையகிராமசபைகூட்டங்களில் நிரைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மீதுஎடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் பற்றியவிபரங்கள். கிராமஊராட்சியின் வாக்காளர்கள் பட்டியல் (கிராமசபைஉறுப்பினர்விபரம்கிராமஊராட்சிக்கு நீங்கள் சொல்லிக் கொடுக்க). ஏற்கனவேநடைபெற்றகிராமசபைக்கூட்டம்பற்றியவிபரங்கள். ஊரகவள்ர்ச்சிதுறைஅறிவித்தகிராமசபைஅஜென்டாபடிபல்வேறுதுறைகள்கிராமசபையில்வைத்துள்ளஅறிக்கைகள்ஆவனங்கள்பயனாளிகள்பட்டியல்ஆகியவற்றைஅந்ததுறையிடமும் உள்ளாட்சி அமைப்பிடமும் தனிதனியாககேட்கவேண்டும். இவற்றையெல்லாமல் தனித்தனியாக அல்லது அதிகஅளவில்இல்லாமல்பிரித்துதகவல்உரிமைசட்டத்தில்கேட்கவேண்டும். ஊராட்சிநிர்வாகத்திடம் சட்டபடியான போதுமான சரியானஆவணங்கள்தகவல்கள்இல்லாத்தாலும் பயத்தாலும் வெறுப்பினாலும் கோபத்தாலும் உங்களுக்கு சரியான பதில்களைவழங்கமறுப்பார்கள். உள்ளாட்சி அமைப்பின் பதில்களைபற்றிகவலைப்படாமல் தகவல் உரிமை சட்டத்தில்மேல்முறையீடுகள் புகார்கள் செய்து தகவல்கள்கிடைக்கும்வரைதொடரவேண்டும்.
ஆகஸ்டு 15 (சுதந்திர தினம்) 4. அக்டோபர் 02 (காந்தி ஜெயந்தி)] இந்தக் கிராம சபைகளையும் தாண்டி கூடுதலாகக் கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என மக்கள் நினைத்தால் கிராம சபை கூட்டத்தை நடத்தலாம். அவ்வாறு கூட்டப்படும் கிராம சபை, சிறப்பு கிராம சபை என்று அழைக்கப்படும்.
Join our WhatsApp group to get more information:
To become a volunteer for Namma Nilgiris, kindly fill out the form below.
Comments